Thursday, April 9, 2015

விண்ணையும் தாண்டி சினிமாவா... in Bay Area on Saturday, May 9, 2015

Tamil Comedy Drama Fundraiser: Vinnaiyum Thaandi Cinemaava
Cancer Institute Foundation
vinnayium thaandi cinemaavaa
Book Online     


Donate!
Cancer Institute Foundation is IRS recognized charity under 501(c)3. Your donations are 100% tax deductible. Tax ID: 20-1140049. Donate using your credit card or PayPal account.


find-us-on-facebook


YouTube Channel
Fundraiser Tamil Comedy Play!


Saturday May 9, 2015 at 2 PM
Canada College Theater
4200 Farm Hill Blvd
Redwood City, CA [ Map ]


Cancer Institute Foundation is proud to host a fundraising Tamil comedy play by Sacramento based Adade Creations. The title of the play is "vinnayium thaandi cinemaavaa". It is a full length comedy play starring local talented drama enthusiasts. 100% of the proceeds from the play go to treat children suffering from cancer. Please purchase your tickets and support this cause.

For more information visit CIF website.

For VIP tickets: Contact Prabha at 408-537-3458
$20 tickets: purchase the tickets online today!


Checkout these Teaser Videos!
Teaser #1       2015-drama-teaser-thumbnail-3   Teaser #2


Sponsors
Tel: (408) 366-0132

Cancer Institute Foundation
7625 WestHill Lane
Cupertino, California 95014
US

Saturday, June 1, 2013

விண்ணையும் தாண்டி சினிமாவா... San Diego Show on April 28, 2013 - Writeup in Thendral



சாண்டியேகோவில் ‘விண்ணையும் தாண்டி சினிமாவா…’ நாடகம்
ஜெயபாண்டியன் கோட்டாளம்
ஒளிப்படங்கள்: ஸ்ரீனிவாசன் சதாசிவம்

சாண்டியேகோ தமிழ்ச் சங்கத்தினர் ஏப்ரல் 28 ஞாயிறன்று டெல் நார்ட்டே உயர்நிலைப் பள்ளியில்  தமிழ்ப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினர். அப்போது தமிழ் மொழித் தேர்வுகள் எழுதிய குழந்தைகளும், பொங்கல் விழாவின்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளும் சான்றிதழ்கள் பெற்றனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சாக்ரமெண்டோ நகரத்தைச் சார்ந்த 'அடடே கிரியேஷன்ஸ்' நாடகக் குழுவினர் 'விண்ணையும் தாண்டி சினிமாவா…' என்ற நாடகத்தை  அரங்கிட்டனர். தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஏனைய தமிழர்களும் வருகை தந்து நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

விண்ணகத்தில் சில பகுதிகளும் பூவுலகில் மற்றப் பகுதிகளும் நடப்பதாக இந் நாடகத்தின் கதையமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தது. தேவேந்திரன், எமன், குபேரன் போன்ற கடவுளர்களும், சினிமா இயக்குநர், குத்துப் பாடலாசிரியர், கூத்துக் கலைஞர் போன்ற மனிதர்களும் நாடகப் பாத்திரங்களாக அமைந்திருந்தனர். தற்காலக் கொச்சைத் தமிழி(ஷி)ல் பேசும் மனிதர்களுடன் காலத்தை வென்ற தேவர்கள் செந்தமிழிலில் பேசியது பல சிரிப்புச் சூழல்களை உருவாக்கிக் கொடுத்தது. ஒரு தெய்வமகள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் சிரிப்பூட்டுவனவாக அமைந்தன. கடவுளர் தற்கால மனித உடைகளை அணிந்து வருவதும் மனிதர் கடவுளர் உடைகளை அணிந்து வருவதும் ஒரு வகைச் சிரிப்பு. கடவுளர் கலிபோர்னியாவிலுள்ள ஒரு வீட்டுக்கு விருந்தினராக வருவதும், ஒரு மனிதன் தேவருலகில் அரசாள முற்படுவதும் மற்றொரு வகைச் சிரிப்பு.

ஒரு முழு நாடகத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல் என்றும், நகைச்சுவை நாடகத்தை எழுதுவது  அதைவிடக் கடினம் என்றும் தமிழ்ச் சங்கத் தொண்டர் பன்னீர்செல்வம் தன் முன்னுரையில் கூறினார். அப்படியானால் நாடகத்தை எழுதியது மட்டுமல்லாமல், பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து, பலமுறை ஒத்திகை பார்த்து, வேறொரு ஊருக்குப் பயணம் செய்து, அங்கு அந்நாடகத்தை அரங்கிடுவது மேலும் எவ்வளவு கடினமானது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மேடையில் தோன்றுபவர்கள் மட்டுமல்லாமல், இசை, விளக்கு, திரை, உடை, ஒப்பனை போன்ற பின்னணி வேலைகளில் பங்கேற்ற ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் முழுநேரப் பணியாற்றுபவராக இருந்தும், தமிழ் மீதுள்ள அளவிலா ஆர்வத்தால் இவ்வளவு முயற்சியும் நேரமும் செலவிட்டு இந்நிகழ்ச்சியைச் செயற்படுத்தியது மிகவும் பாராட்டத் தக்கது.

இந்நாடகத்தில் நடித்தவர்கள் தொழிலரல்லாத பொழுதுபோக்கரே என்பதைச் சிலநேரங்களில் நாம் மறந்துவிடுமளவுக்குச் சிறப்பாக நடித்தனர். சினிமா நடிகை வேடந்தாங்கிய ஸ்ரவந்தி அரங்க முன்னிலையுடனும் (stage presence), தாளத்துடன் இயைந்த நேரவுணர்வுடனும் (sense of timing) நடித்தார். தந்தையுடன் கோபித்துக் காலுதைத்து அவசரமாக வணக்கஞ் செலுத்திச் சென்றது மிக அருமை. குத்துப்பாடலாசிரியராக முருகேஷ் தோன்றிய போதெல்லாம் அரங்கத்தில் சிரிப்பலை. கொம்பர்களாக  ராம்ராஜும், பாலாவும், எமதர்மராக ஹரியும் சிறப்பாக நடித்திருந்தனர்.  கிண்டல் கொப்பளிக்க வசனம் பேசும் நாரதராக மூர்த்தியும் திரைப்பட பாடல் கேட்டு கடுப்பாகும் இந்திரனாக சுந்தரும், குபேரனாக வெங்கட்டும் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் படு துல்லியம். சித்ரகுப்தராகவும், டூப் போட சொல்லும் ஹீரோவாகவும் இரு வேடங்களில் நடித்த சாம் ஜோர். கணீர் என்ற குரலில் பேசி நடித்த, டைரக்டராக ரமேஷும் கூத்து கோமளவல்லியாக ஜெயந்தியும் பிரமாதம். நிகொம்பனாகவும் அமெரிக்கவாழ் தமிழனாகவும் வித்தியாசம் காட்டி நடித்தார் ராம்ராஜ். ஒரே காட்சியில் நடித்தாலும் தங்கமணியாக அனுப்ரியாவும் நிருபராக ஸ்ரீதரும் சிறப்பாக செய்தனர். திரைக்குப்-பின் ஒருங்கிணைப்பிலும் இவர்கள் இருவரின் பங்களிப்பு முக்கியமானது.

இந்நாடகத்தை எழுதி இயக்கியது ஜெயந்தி ஸ்ரீதர். தமிழில் இலக்கணப் பிழைகளும் உச்சரிப்புக் குறைபாடுகளும் நிறைந்துள்ள இக்காலத்தில் செந்தமிழ் உரையாடல்களை ஜெயந்தி ஸ்ரீதர் இந்நாடகத்தில் அமைத்துள்ளது ஒரு தனிச்சிறப்பு. தமிழில் உயர்தர உரைநடை எழுதுவோரும் பேசுவோரும் உள்ளனர் என்பதைக் காணும்போது 'தமிழ் இனி மெல்லப் பிழைத்தெழும்' என்ற புத்துணர்ச்சி நமக்கு உண்டாகிறது.

Thursday, February 3, 2011

Audience Feedback for the Drama in Sacramento, CA

Review in Thendral - Tamil Magazine - Feb 2011

http://tamilonline.com/thendral/submorecontent.aspx?id=123&cid=18&sid=3&aid=6993




















ஜனவரி 22, 2011 அன்று அடடே க்ரியேஷன்ஸ் வழங்கிய "விண்ணையும் தாண்டி சினிமாவா..." என்ற நகைச்சுவை நாடகம் சாக்ரமெண்டோவில் அரங்கேறியது.

 "பிள்ளையாரப்பா...பிள்ளையாரப்பா..இன்று நடக்க வேண்டியது எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்" என்று  முதல் காட்சியில் தனக்கே உரிய கலகக் குரலோடு நாரதர் தோன்றவுமே "ஆஹா..இது என்ன புராண கதையா?"  என்ற யோசனையில் கண்கள் விரிந்தன.  விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் சினிமாவால் நகைச்சுவையோடு இணைக்கும் அழகான கற்பனைதான் இந்த நாடகம்.  சினிமாவை இழிவாகப் பேசும் இந்திரனுக்கு எமலோகத்தில் ஒரு மானுடன் சாபம் இட்டு விடுகிறான்.  சாப விமோசனத்திற்காக இந்திரன் திரைப்படம் எடுக்கும் கலாட்டா தான் திரைக்கதை.

எமலோகம் போல வடிவமைக்கப்பட்ட மேடை, அதில் திரைச்சீலை, ஆசனங்கள், ஆடை அணிகலன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பெரிய சபாஷ்! பார்வையாளர்களை மேடையின் பிரம்மாண்டம் அசத்திவிட்டது. எமதர்மராஜன் மற்றும் சித்ரகுப்தனின் தோற்றமும் நடிப்பும் கச்சிதம்.  எமலோகத்துக்குள் படு ஸ்டைலாக நுழையும் மானுடன்   "குமாரசாமி.."குத்துப்பாட்டு குமாரசாமி" என்று மார்தட்டிக்கொள்ளும் இடம் நச்!  கிங்கரர்கள் வசனமே பேசாமல் சிரிப்பூட்டியது ரசிக்கும்படியாக இருந்தது.




















பிரபலமான சினிமா வசனங்களும் பாடல்களும் சிச்சுவேஷனுக்கு ஏற்ப ஒலிக்கும்போது இந்திரன் கடுப்பாவது ரசிகர்களிடம் பலத்த கரவொலியை எழுப்பியது. "திரைப்படத்தை இழிவு படுத்தி  சாபம் பெற்றதால் நீ சினிமா எடுத்துதான் விமோசனம் தேட வேண்டும்" என்று கதை மேலே தொடர வித்திடுகிறார் நாரதர்.  ஆரம்பிக்கிறது டைரக்டர் வேட்டை.  "தில்லாலங்கடி டப்பாங்குத்து.."  பாடல் ஒலிக்க கிங்கரர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் இருந்து தெருக்கூத்து நடிகையான கூத்து கோமளவல்லி (நாடகத்தின் நிஜ டைரக்டர் ஜெயந்தி) வெளியே வர ஆரம்பமாகிறது கல்யாண கலாட்டா.  பிரபல டைரக்டர் தாடி தாண்டவராயனையும்  கிங்கரர்கள் அழைத்து எமலோகம் கலகலக்கிறது.

அழகாக வடிவமைக்கப்பட புஷ்பகவிமானத்தில் குபேரனின் மகள் வந்திறங்கிய காட்சி பிரம்மாண்டம்.  படத்திற்கு குபேரன் ஃபினான்சியர் ஆக ஒப்புக்கொள்ள, "இவர்கள் எடுக்கபோகும் திரைபடத்தில் நீ தான் கதாநாயகி" என்று குபேரன் சொல்ல,  "ஆஹா..எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மீனலோசனி மெய் சிலிர்க்க "இன்னும் படமே எடுக்கவில்லை..இதையெல்லாம் விருது வழங்கும் விழாவிற்கு வைத்துக் கொள்ளம்மா" என்கிறான் குபேரன். மீனலோசனியின் பெயரை "மிஷ்கி" என்று டைரக்டர் மாத்துவது சினிமா டச்.

படபிடிப்பு நடக்கும் அமெரிக்கத் தோழி வீட்டில் நடக்கும் காட்சிகளும், எல்லாக் காட்சிகளுக்கும் "டூப் போட்டுக்கலாமா?" என்று கேட்கும் ஹீரோ வரும் காட்சியும் சரியான நகைச்சுவைச் சூறாவளிதான்.  குடைச்சல் நிருபர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் குழப்பமான பதில்களை தந்து மிஷ்கியும் கோமளவல்லி
யும்  தாண்டவராயனும்  தப்பிக்கும் காட்சி காமெடிக் கூத்து.  

நாரதராக மூர்த்தி, இந்திரனாக சுந்தர், எமனாக ஷண்முக சுந்தரம், சித்திரகுப்தனாக சாம், குபேரனாக வெங்கட், குபேரனின் மகளாக ஸ்ரவந்தி, கோமளவல்லியாக ஜெயந்தி, தாண்டவராயனாக ரமேஷ், கிங்கரர்களாக ராமராஜ் பாலா எல்லோருமே நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் பிரமாதப் படுத்தி விட்டனர்.  ஒரே காட்சியில் தோன்றினாலும் தங்கமணியாக வாணி , ரங்கமணியாக குமார், ஹீரோவாக Dr. குமார், நிருபராக சுபி, டிவி நிர்வாகியாக  சுபோ - இவர்களின் நடிப்பு படு இயல்பாக இருந்தது.  சுதீரின் மேடை வடிவமைப்பும் ப்ரீத்தியின் கலை நுணுக்கமும்  நாடகத்துக்கு மெருகேற்றின

அடடே க்ரியேஷன்ஸ் முதல் முயற்சியிலேயே பெரிய உயரத்தைத் தொட்டிருக்கிறது. இந்த முயற்சிக்கு மூல காரணமான, நாடகத்தை எழுதி இயக்கிய  ஜெயந்திக்கு ஒரு பெரிய சபாஷ்!

-அர்ச்சனா பரமேஸ்வரன்
சாக்ரமெண்டோ


------------------------------------------------------------------------------------------------------

From: Kirtana Vasudevan

Hi,

I just wanted to let you all know that I really enjoyed the drama "Vinnayum thaandi cinemavaa" last week. I was impressed by the backdrops and the backstage crew's promptness in changing scenes and lighting. The little details of the costumes and props such as the lava lamps were noticed and appreciated.

Just because I started by congratulating your team on the sets doesn't mean that the script wasn't great! I used to work with a dance drama troupe many years ago and I noticed all these little details which made your performance a truly professional debut. Sravanthi coming onstage in the Pushpaka vimanam was absolutely outstanding!

It goes without saying that the dialogues were delivered well and I liked the way all of you engaged with the (rowdy!) audience. It added to the fun of the evening. The recorded narration wasn't clear and if that had been live, it would have been awesome. I loved the way, the actors (and actresses, of course,) were professional on stage and made adjustments when the sound cues didn't come in time or the mikes weren't turned on loud enough. Most of the Indian programmes that I have attended have always had problems with the audio but you'll overcame that obstacle.

The script was very witty, truly Californian and well executed. Jayanthi, I'm waiting for your next drama and I'm sure you will have performances in Sacramento and then in the Bay Area.

The costumes were fabulous and the make up was done well. The accessories worn by the actors were well coordinated. The colors and jewellery looked great in the stage lighting.

The other things that made this event stand out was that there was child care offered. Yes, I know there was delicious snacks and food too but that's not what made the difference for some of my friends in deciding whether or not to come.

At your next event it would be great if you'll started on time and let us know how long the event would be. We were there at 3:45 and hadn't planned on it taking up 4 and a half hours (not counting dinner) on the one weekend that we're free.

Congratulations again and good luck on the next drama!

Thank you,
_______________________________________________________________
From: Seema Nair

Thank you to the Sridhar family and the rest of the crew for making it a pleasant evening:)
Regards,
_______________________________________________________________
From: kala kowtha

Super job Jayanthi!
Both you and the cast were wonderful.
The backstage and support staff usually are not in the limelight but we know how much work goes into such an effort.
Awesome improvisation when there were technical issues. Very entertaining indeed!

_______________________________________________________________
From: Radhakrishnan Nageswaran

Yes. Thank you for giving us the opportunity to attend the same. It was superb!

It is a milestone for the Tamil community of Sacramento!  A home grown group – staging a drama!

High accolades to you and the troup!  Especially you super dire – tucker or tucker director and the super editor – Sridhar.

Only feedback was, Sridhar should have cut some more to make the first initial part a little crisp.  We could have started @ 4.30 PM and finished the play around 7.00 ish.  The break could have been cut down by a little bit.

Kids care was excellent idea, but our kids couldn’t sustain the entire 3 hours period there. Towards the end they became very tired and grumpy.

Dinner was very good for $5 – very reasonably priced – except for the chpati – which was very very dry. 

Tea and pakodas were excellent!

Hope after all the costs for venue etc., you were able to raise money for the temple.
_______________________________________________________________
From: Pradeep Kowkutla

It was great play Jayanthi and Sravanthi.  Hopefully will have many more such plays.
_______________________________________________________________
From: Lakshmi Balaji

Hi Jayanthi,
You and the team put up such a great show - Very entertaining, great cast and so well put together!
Congrats and wishes for continued success!
Warm regards,
_______________________________________________________________
From: Prabha Vish

Jayanthi,
It was fun. Vish and I had a very good time. Great Job!
_______________________________________________________________
From: Radhika Murthy

Hi Jayanthi,

Great job by everyone – loved the drama! Costumes were awesome, dialogues were hilarious!
Well done :-)

Cheers,
_______________________________________________________________
From: Gowri Kowtha

Jayanthi:

The Drama was outstanding. Please produce more.
_______________________________________________________________

Thursday, January 27, 2011

VTC @ Sacramento - Drama Photos

The drama  விண்ணையும் தாண்டி சினிமாவா was staged successfully on 01-22-2011 and we got lot of  positive feedback from our people.


Please send your feedback to adadecreations@gmail.com

If you or your friends want to organize a show, Please don't hesitate to contact us.